Phone Number

+91 91737 36873

News

Our News

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கும் 'பையில் அடங்கக்கூடிய' சிறிய காற்றாலை

  • காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர்.

    • எழுதியவர்,ரூபேஷ் சோன்வானே
    • பதவி,பிபிசி குஜராத்திக்காக

    “இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர்.

    “சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் மின்சாரத்தை தான் உற்பத்திச் செய்ய முடியும்.”